/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீர்நிலையில் பசுமை முயற்சி ஆயிரம் மரக்கன்று நடவு நீர்நிலையில் பசுமை முயற்சி ஆயிரம் மரக்கன்று நடவு
நீர்நிலையில் பசுமை முயற்சி ஆயிரம் மரக்கன்று நடவு
நீர்நிலையில் பசுமை முயற்சி ஆயிரம் மரக்கன்று நடவு
நீர்நிலையில் பசுமை முயற்சி ஆயிரம் மரக்கன்று நடவு
ADDED : ஜூலை 16, 2024 02:28 AM

பல்லடம்,;நீர் நிலைகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக, பல்லடம் அருகே, ஆயிரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டன.
பருவ மழையை முன்னிட்டு, பல்லடம் வனம் அமைப்பு, மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீர் நிலைகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சியுடன் இணைந்து, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் மற்றும் ஊஞ்சபாளையம் நீர் ஆதார குட்டைகளில், ஆயிரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். வனம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். வனம் அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், சுக்கம்பாளையம் குட்டை அருகே மரக்கன்று நடவு செய்யப்பட்டன.