Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணிக்கம்பட்டியில் கால்நடை மருந்தகம் மறுப்பு

பணிக்கம்பட்டியில் கால்நடை மருந்தகம் மறுப்பு

பணிக்கம்பட்டியில் கால்நடை மருந்தகம் மறுப்பு

பணிக்கம்பட்டியில் கால்நடை மருந்தகம் மறுப்பு

UPDATED : ஜூலை 30, 2024 08:17 AMADDED : ஜூலை 30, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
பல்லடம்;பணிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

பணிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கரடிவாவி, சாமிகவுண்டம்பாளையம், வடுகபாளையம் ஆகிய ஏதேனும் ஒரு கால்நடை மருந்தகங்களுக்கு செல்ல வேண்டும். இதனால், மருத்துவ செலவுடன், கால விரயம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது.

எனவே, இப்பகுதியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என கடந்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். சமீபத்தில், கோழி இன நோய் ஆராய்ச்சி மையத்தை ஆய்வு செய்ய வந்த கால்நடைத்துறை இயக்குனரிடமும் இது குறித்து தெரிவித்துள்ளோம்.

பல ஆண்டுகளாக அதிகாரிகளை சந்திக்க நடையாய் நடந்து வருகிறோம். எனவே, பணிக்கம்பட்டி கிராமத்தில் புதிய கால்நடை மருந்தகம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us