/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் உடல் உறுப்புகள் தானம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜூலை 30, 2024 01:52 AM

திருப்பூர்;கோவையில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சிவபாலன் - ஹேமலதா தம்பதி. இவர்களின் மகன் நரேன், 19; கோவையில் தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 18ம் தேதி காரில் திருப்பூரை சேர்ந்த நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். ரோட்டின் நடுவே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இருவர் இறந்தனர். நரேன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். நரேனின் குடும்பத்தினர், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
தொடர்ந்து, மாணவனின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட, 11 உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. திருப்பூரில் நேற்று நடந்த இறுதி சடங்கில், சப்-கலெக்டர் சவுமியா, எம்.எல்.ஏ., செல்ரவாஜ் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்பினர் என, பலரும் பங்கேற்று நரேனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.