ADDED : ஜூலை 17, 2024 11:59 PM
திருப்பூர் : திருப்பூரில், தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.நேற்று இரவு, 9:30 மணிக்கு, பல்லடம் ரோடு டி.கே.டி., மில்லில் இருந்து வீரபாண்டி நோக்கி, சரக்கு வாகனம் சென்றது.
ஆர்.டி.ஓ., சிக்னல் அருகே, நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய வேன், அருகே இருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில், ஒருவர் பலியானார். சிலர் காயமடைந்தனர்.
வாகன நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இறந்தவர் யார் என்பது குறித்து, வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.