/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீரமாத்தி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் வீரமாத்தி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
வீரமாத்தி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
வீரமாத்தி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
வீரமாத்தி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 17, 2024 11:56 PM

திருப்பூர் : திருப்பூர், பெரிச்சிபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதில், மல்லிகை பூ மற்றும் மஞ்சளால் அலங்கரிக்கப்பட்ட சிலம்பாத்தாள், பெத்தாயி அம்மன் சாமிகளுக்கு கருப்பசாமி காவலுடன் மணமேடையில் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் மல்லிகை மற்றும் மஞ்சளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
ஏராளமான பெண்கள் பங்கேற்று, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, வீரமாத்தி அம்மன் தீக்குளி பாயும் நிகழ்ச்சி நடந்தது. பங்கேற்ற அனைத்து பெண்களுக்கு மல்லிகைப்பூ மற்றும் மஞ்சள் ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டது.