ADDED : ஜூன் 10, 2024 02:14 AM

அவிநாசி;அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், கொடுவாய் வெற்றி வேலன் கலைக் குழு வள்ளி கும்மியாட்டத்தின், 69வது அரங்கேற்றம் நடைபெற்றது.
இதில், வரலாற்றுத் தொடர்புடைய கிராமிய பாடலுக்கு ஏற்றவாறு, பெண்கள் வள்ளி கும்மியாட்டம் ஆடினர். கிராமிய கலைகள் மற்றும் பண்பாடு அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாகவெற்றிவேலன் வள்ளி கும்மி குழு மூலம் 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 163 குழுவினர் உருவாக்கப்பட்டுள்ளனர் என பயிற்சி ஆசிரியர்கள் தங்கவேல், செந்தில்குமார், சுப்பிரமணியம், யோகானந்தம் கூறினர்.