Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் 'ஓட்டை'

அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் 'ஓட்டை'

அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் 'ஓட்டை'

அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் 'ஓட்டை'

ADDED : ஜூன் 10, 2024 02:13 AM


Google News
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., வலுவான கட்சியாக இருந்தது. அடுத்த இடத்தில் தி.மு.க.,வும், மற்ற கட்சிகளும் இருந்துள்ளன.

தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மாவட்டத்தில் முதன்முதலாக நடந்த, 2011 தேர்தலில், எட்டு சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றியது.

அடுத்துவந்த, 2016 தேர்தலில், மடத்துக்குளம், தாராபுரம் தொகுதிகளை குறைந்தபட்ச ஓட்டு வித்தியாசத்தில் இழந்தது. கடந்த 2021 தேர்தலில், தாராபுரம், காங்கயம், திருப்பூர் தெற்கு தொகுதிகளை இழந்தது. லோக்சபா தேர்தலிலும், இருமுறை வெற்றியை ஈட்டிய அ.தி.மு.க., இந்திய கம்யூ., கட்சியிடம் இருமுறை தோல்வியடைந்துள்ளது.

ஜெ., மறைவு, உட்கட்சி குழப்பம் என, திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், தொடர்ந்து ஓட்டு வங்கி சரிந்து கொண்டே இருப்பது, இத்தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது.

எஃகு கோட்டையாக இருந்த அ.தி.மு.க., வில், பல இடங்களில் ஓட்டை விழுந்துள்ளதாக, மாற்றுக்கட்சியினர் பேசத்துவங்கிவிட்டனர்.

இனியாவது, கட்சி உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்து,மீண்டும் வலுவான கட்சியாக திருப்பூரில் மாற வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

பலத்தை நிரூபிப்போம்: அ.தி.மு.க.,வினர்

அ.தி. மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

திருப்பூர் மக்கள் தெளிவாக இருப்பர்; லோக்சபா தேர்தல் என்பதால், பா.ஜ., - காங்கிரஸ் என்ற கோணத்தில் மட்டும் தான் பார்க்கின்றனர். பா.ஜ., தமிழகத்துக்கு வேண்டாம் என்பதால், இந்திய கம்யூ., கட்சியை ஆதரித்துள்ளனர். அதற்காக, தி.மு.க., வலுவாகிவிட்டது என்றும் கூறமுடியாது.

சட்டசபை தேர்தல் என்றால், அ.தி.மு.க., - தி.மு.க., என்று பார்ப்பார்கள். தி.மு.க.,வின் ஓட்டுவங்கி சரிந்துள்ளது; முன்பு இருந்ததை காட்டிலும் அ.தி.மு.க., ஓட்டு வங்கி ஸ்ட்ராங் ஆகியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நடுநிலையாளர், புதிய வாக்காளர்கள் என, 8 சதவீத ஓட்டு வங்கி இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் எங்கள் பலத்தை நிரூபித்து, ஆட்சியை பிடிப்போம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us