/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவி 'குரூப் 1ஏ' தேர்வில் மாநில சாதனை ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவி 'குரூப் 1ஏ' தேர்வில் மாநில சாதனை
ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவி 'குரூப் 1ஏ' தேர்வில் மாநில சாதனை
ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவி 'குரூப் 1ஏ' தேர்வில் மாநில சாதனை
ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவி 'குரூப் 1ஏ' தேர்வில் மாநில சாதனை
ADDED : ஜூன் 24, 2024 02:22 AM

திருப்பூர்;தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் நடத்திய 'குரூப் 1 ஏ' பணியிடத்திற்கான தேர்வில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி கீர்த்தனா 654.75 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தில் தேர்வாகியுள்ளார்.
இதன் மூலம் இவர் உதவி வனப்பாதுகாவல ராக தேர்வு பெற்றுள்ளார். கீர்த்தனா, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, மாணவியின் தந்தையும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் கீர்த்தனாவை வாழ்த்தினர்.