/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கள்ளச்சாராயத்துக்கு எதிராக இந்து மகா சபா ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராயத்துக்கு எதிராக இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயத்துக்கு எதிராக இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயத்துக்கு எதிராக இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராயத்துக்கு எதிராக இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 02:22 AM
திருப்பூர்:கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்; மேலும் பலர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வல்லபை பாலா தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் குருசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் அழகேந்திரன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் மணிஷ்குமார் ரமேஷ் அஹானி, மாவட்ட இளைஞரணி பொதுசெயலாளர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல... திருப்பூரிலும் கள்ளச்சாராயம் விற்பனை மறைமுகமாக நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதேநிலை நீடித்தால் நிலைமை விபரீதமாகும். கள்ளக்குறிச்சி கலெக்டர் சரியான விவரத்தை அளித்திருந்தால், இவ்வளவு உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது. கள்ளச்சாராய விவகாரத்தில், தமிழக அரசை கலைக்க வேண்டும்; ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென, நிர்வாகிகள் பேசினர்.