/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'குற்றங்களை தடுக்க ஒன்றிணையுங்கள்' 'குற்றங்களை தடுக்க ஒன்றிணையுங்கள்'
'குற்றங்களை தடுக்க ஒன்றிணையுங்கள்'
'குற்றங்களை தடுக்க ஒன்றிணையுங்கள்'
'குற்றங்களை தடுக்க ஒன்றிணையுங்கள்'
ADDED : ஜூலை 17, 2024 11:57 PM

திருப்பூர் : சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு 2 சார்பில், பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் அழகர்சாமி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''நீதியை ஆதரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும், உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வை அச்சுறுத்தும் குற்றங்களை தடுக்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே இந்நாள் வலியுறுத்துகிறது'' என்றார்.
மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், தீபன் சந்தோஷ், லோகேஷ், ஜெயலட்சுமி, ரூபினா ஆகியோர் தலைமையில், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஆசிரியை புஷ்பராணி, நன்றி கூறினார்.