ADDED : ஜூன் 24, 2024 10:43 PM
உடுமலை;உடுமலையில் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பிரச்னைகளை, ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவிக்கும் வகையில், ஒன்றியக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில், கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை, ரோடு பிரச்னை உட்பட பல்வேறு குறைகளை கவுன்சிலர்கள் தெரிவித்து விவாதிக்கின்றனர். இதன் வாயிலாக, பிரச்னைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், உடுமலை ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் நாளை (26ம் தேதி) காலை, 11:00 மணிக்கு ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடக்கிறது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்களும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.