/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எங்க ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வருமா? தேவனுார்புதுாரில் எதிர்பார்ப்பு எங்க ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வருமா? தேவனுார்புதுாரில் எதிர்பார்ப்பு
எங்க ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வருமா? தேவனுார்புதுாரில் எதிர்பார்ப்பு
எங்க ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வருமா? தேவனுார்புதுாரில் எதிர்பார்ப்பு
எங்க ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் வருமா? தேவனுார்புதுாரில் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 24, 2024 10:42 PM
உடுமலை;ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சார்பில், பல முறை தீர்மானம் நிறைவேற்றி, மனு அனுப்பியும், தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை - ஆனைமலை ரோட்டில் தேவனுார்புதுார் கிராமம் அமைந்துள்ளது. உடுமலை மற்றும் பொள்ளாச்சி போக்குவரத்து கிளைகள் சார்பில், இவ்வழித்தடத்தில், 25க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, 15க்கும் அதிகமான கிராம மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இந்த சந்திப்பு பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
அங்குள்ள மூன்று ரோடு சந்திப்பில், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு, போதிய இடவசதியில்லாததால், பஸ்கள் ஆனைமலை ரோட்டில் நிறுத்தப்படும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாது.
பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள், அங்கு திரும்பிச்செல்லவும் போதிய இடவசதியில்லை.
இந்நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து உடுமலை வழியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மற்றும் ஆழியாறு, வால்பாறை உட்பட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களும் தேவனுார்புதுார் வழியாகவே செல்கின்றன. இதனால், மூன்று ரோடு சந்திப்பில், நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, தேவனுார்புதுாரில், பஸ் ஸ்டாண்ட் அமைத்தால், அப்பகுதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடுமலை ஒன்றிய மேற்குப்பகுதி கிராமங்களின் மையமாகவும், கோவை -- திருப்பூர் மாவட்ட எல்லையிலும் தேவனுார்புதுார் உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து, 25க்கும் அதிகமான பஸ்கள் வந்து திரும்பும் இப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, தேவனுார்புதுார் ஊராட்சியில், பல முறை தீர்மானம் நிறைவேற்றி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் அனுப்பினர்.
மக்கள் பிரதிநிதிகளிடமும், தொடர்ந்து மனு கொடுத்துள்ளனர். உடனடியாக அப்பகுதியில், இடம் தேர்வு செய்து பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.