/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உச்சி மாகாளியம்மன் கோவில் ஆண்டுவிழா உச்சி மாகாளியம்மன் கோவில் ஆண்டுவிழா
உச்சி மாகாளியம்மன் கோவில் ஆண்டுவிழா
உச்சி மாகாளியம்மன் கோவில் ஆண்டுவிழா
உச்சி மாகாளியம்மன் கோவில் ஆண்டுவிழா
ADDED : ஜூன் 03, 2024 12:14 AM

உடுமலை;மலையாண்டிபட்டினம் உச்சி மாகாளியம்மன் கோவிலில் நடந்த முதலாம் ஆண்டு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் புகழ்பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்தாண்டு கும்பாபிேஷகம் நடந்தது. ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கோவிலின் முதலாம் ஆண்டு விழா நடந்தது.
திருமூர்த்திமலை, அமராவதி, கொழுமம் ஆற்றில் இருந்து பொதுமக்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு தீர்த்தாபிேஷகம் மற்றும் பால், தேன், பன்னீர், இளநீர் உட்பட 16 வகை திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.
மலர் அலங்காரத்தில் காளியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், உச்சி மகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், மலையாண்டிபட்டணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.