ADDED : ஜூலை 10, 2024 11:35 PM
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உணவு தேடி வந்த மயில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் அமர்ந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, பரிதாபமாக மயில் இறந்தது.
வனத்துறையினர் விரைந்து வந்தனர். உயிரிழந்தது, இரண்டு வயது ஆண் மயில் என்பது தெரிந்தது. அதேபோல், கே.வி.ஆர்., நகரில் மின்சாரம் தாக்கியதில், பெண் மயில் ஒன்று இறந்தது.