/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உப்பாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை; பா.ஜ., வலியுறுத்தல் உப்பாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை; பா.ஜ., வலியுறுத்தல்
உப்பாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை; பா.ஜ., வலியுறுத்தல்
உப்பாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை; பா.ஜ., வலியுறுத்தல்
உப்பாறு அணையில் வண்டல் மண் எடுக்க தடை; பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 11:35 PM
திருப்பூர் : தாராபுரத்தில் உள்ள உப்பாறு அணையில் வண்டல் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார் திருப்பூர் கலெக்டர், தாராபுரம் ஆர்.டி.ஓ., உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனு:
தமிழகத்தில் விவசாய பணிக்காகவும், மண்பாண்ட தொழிலாளர்கள் தேவைக்காகவும் தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு அணையில் இருந்து வண்டல் மண் எடுத்தால், அணையில் உள்ள நீர் பாசனத்துக்கு செல்லும் வாய்க்கால் மட்டத்தை விட, அணை ஆழமாக சென்று விடும். பின், வாய்க்காலில் தண்ணீர் வராது. ஏற்கனவே, அணை ஆழமாக உள்ளது.
பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்திலிருந்து குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் குறைவான நீர், வண்டல் மண் எடுப்பதன் மூலம், அந்த குழி மட்டுமே நிரம்பும்; பாசன விவசாயிகளுக்கு உயிர் நீர் வழங்க தண்ணீர் கால்வாயின் வழியாக வெளியேறாது. எனவே, வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.