/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உயரம் குறைந்த பாலம் தினமும் சிக்கும் லாரிகள் உயரம் குறைந்த பாலம் தினமும் சிக்கும் லாரிகள்
உயரம் குறைந்த பாலம் தினமும் சிக்கும் லாரிகள்
உயரம் குறைந்த பாலம் தினமும் சிக்கும் லாரிகள்
உயரம் குறைந்த பாலம் தினமும் சிக்கும் லாரிகள்
ADDED : ஜூலை 07, 2024 11:07 PM
திருப்பூர்:கோவை -- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில், பெருமாநல்லுார்- வலசுப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு பாலம் மிக தாழ்வாக உள்ளது.
இந்த வழியாக வரும் கன்டெய்னர் லாரிகள் பாலத்தில் சிக்கி கொள்வது தொடர் கதையாக உள்ளது.
கடந்த வாரம் சிக்கி கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று கடும் சிரமத்திற்கு பின் மீட்கப்பட்டது.
தினமும் 4 முதல் 5 லாரிகள் வரை சிக்கி கொள்கின்றன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
''இந்த சிரமத்தை தவிர்க்க பாலத்தில் இருந்து 50 அடிக்கு முன் பாலத்தின் உயரத்தை அறியும் வகையில் இரும்பு ஆங்கிலில் தடுப்பு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதியூர் பிரிவு பாலம் வழியாக செல்லலாம் என்று வழிகாட்டிப்பலகையையும் வைக்க வேண்டும்'' என்கின்றனர், லாரி டிரைவர்கள்.