/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆழ் குழாய் கிணற்றுக்கானமின் இணைப்பு துண்டிப்பு ஆழ் குழாய் கிணற்றுக்கானமின் இணைப்பு துண்டிப்பு
ஆழ் குழாய் கிணற்றுக்கானமின் இணைப்பு துண்டிப்பு
ஆழ் குழாய் கிணற்றுக்கானமின் இணைப்பு துண்டிப்பு
ஆழ் குழாய் கிணற்றுக்கானமின் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஜூலை 07, 2024 11:07 PM
திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது, அக்ரஹாரப்புத்துார் வசந்தம் நகர்; அப்பகுதியில், 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மெயின் வீதியில், தார்ரோடு அமைக்கும் பணி, கடந்த வாரம் நிறைவடைந்தது. தார் ரோடு அமைத்த பிறகு, பக்கவாட்டில் 'கிராவல்' மண் கொட்டி ரோட்டை பாதுகாக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக, பழைய தார்ரோட்டை 'மில்லிங்' செய்து, அதன் மீது கிரஷர் கலவை கொண்டு ரோடு அமைக்கப்பட்டது. அப்போது, கடைசி வீதியில் உள்ள, ஆழ்குழாய் கிணற்றுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ஆழ்குழாய் கிணற்றுக்கான மின் இணைப்பு மீண்டும் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தம், எட்டு குறுக்கு வீதிகள் உள்ள நிலையில், ஒரே தொட்டி மட்டும் வைத்து, ஆழ்குழாய் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், இருவீதிக்கு ஒன்று என்ற அளவில் உப்பு தண்ணீர் தொட்டிகளை வைத்து, தினமும் வினியோகிக்க வேண்டும்.