/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி உடுமலையில் இலவச பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 25, 2024 01:47 AM
உடுமலை;உடுமலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலம் வாயிலாக, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, '2 ஏ' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2, '2 ஏ' ஆகியவற்றுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளுது. குரூப் - 2 பதவிக்கு, 507 காலிப்பணியிடங்களும், குரூப் - '2 ஏ' பதவிக்கு, 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம், 2,327 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான கல்விதகுதியாக, ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூலை, 19 விண்ணப்பிக்க கடைசி நாளாகவும், முதல் நிலைத்தேர்வு, செப்., 14ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான, இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் கூடுதல் பயிற்சி மையத்தில், வரும், ஜூலை, 1ம் தேதி முதல் நடக்கிறது.
இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421- -2999152, 94990 55944 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சியில், மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.