/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 25, 2024 01:47 AM
உடுமலை;கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். கால்நடை வளர்ப்பில், மொத்த செலவில், 65 முதல், -70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.
தீவன தேவை மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதால், தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசு தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசு மானியத்துடன் கூடிய பசுந்தீவன உற்பத்தி அதிகரிக்கவும், பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 3 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
தீவனப் பயிர்களாக, தானிய பயிர்கள், புல் வகைகள், பருப்பு பயிர் வகைகள், மேய்ச்சல் நில புல் வகைகள் ஆகியவற்றை பயிரிடலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.