/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் மாவட்டத்தில் பிரிவு அலுவலகங்கள் மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திருப்பூர் மாவட்டத்தில் பிரிவு அலுவலகங்கள் மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பிரிவு அலுவலகங்கள் மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பிரிவு அலுவலகங்கள் மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பிரிவு அலுவலகங்கள் மின்வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : ஜூலை 03, 2024 01:57 AM
திருப்பூர்;கோவையில் இருந்த மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், திருப்பூர் வருவாய் மாவட்ட எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ளன.
கோவை தெற்கு மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, தெக்கலுார் கிழக்கு மற்றும் மேற்கு பிரிவு அலுவலகங்கள், திருப்பூர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட அவிநாசி கோட்டம், அவிநாசி உபகோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வஞ்சிபாளையம் மற்றும் மங்கலம் பிரிவு அலுவலகங்கள், அவிநாசி கோட்டம், அனுப்பர்பாளையம் உபகோட்டத்துடனும், பூமலுார் பிரிவு அலுவலகம், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி உபகோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் இருந்து சாலைப்புதுார், ஜல்லிப்பட்டி பிரிவு அலுவலகங்கள், கோவை மின்பகிர்மான வட்டம், நெகமம் கோட்டம், சுல்தான்பேட்டை உபகோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
கோவை தெற்கு பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அந்தந்த பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள், தங்களது மின் சேவைக்கு அந்தந்த மின் பகிர்மான வட்டம், கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்,' என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் மவுனம் ஏன்?
மின்நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கோவை மாவட்டத்தில் இருந்த மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, கோவை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், புதிய பிரிவு அலுவலகங்கள் விவரம் தொடர்பாக, திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் ஏன் மவுனம் காக்கின்றனர் என, மின் நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.