/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கேபிள் 'டிவி' இணைப்பு எண்ணிக்கை டெண்டர்தாரர் விவரம் எதுவும் இல்லை அதிர்ச்சி தரும் தாசில்தார் தகவல் கேபிள் 'டிவி' இணைப்பு எண்ணிக்கை டெண்டர்தாரர் விவரம் எதுவும் இல்லை அதிர்ச்சி தரும் தாசில்தார் தகவல்
கேபிள் 'டிவி' இணைப்பு எண்ணிக்கை டெண்டர்தாரர் விவரம் எதுவும் இல்லை அதிர்ச்சி தரும் தாசில்தார் தகவல்
கேபிள் 'டிவி' இணைப்பு எண்ணிக்கை டெண்டர்தாரர் விவரம் எதுவும் இல்லை அதிர்ச்சி தரும் தாசில்தார் தகவல்
கேபிள் 'டிவி' இணைப்பு எண்ணிக்கை டெண்டர்தாரர் விவரம் எதுவும் இல்லை அதிர்ச்சி தரும் தாசில்தார் தகவல்
ADDED : ஜூலை 03, 2024 01:57 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி இணைப்புகள் எண்ணிக்கை, டெண்டர் எடுத்தோர் விவரம் எதுவும் தங்களிடம் இல்லை, என அரசு கேபிள் தாசில்தார் தகவல் அளித்துள்ளார்.
திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவி, திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன தாசில்தார் அலுவலகத்தில் ஆர்.டி.ஐ.,யில் சில தகவல் கேட்டிருந்தார். அதற்கு அரசு கேபிள் டிவி தாசில்தார் முரளி அளித்த விவரம் வருமாறு:
திருப்பூர் மாவட்டத்தில் 40,399 மற்றும் மாநகராட்சி பகுதியில் 6,680 செட்டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கேபிள் ஆபரேட்டர்கள் எவ்வளவு பேர்; அவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள இணைப்புகளின் எண்ணிக்கை விவரம் இவ்வலுவலகத்தில் இல்லை.
அரசு கேபிள் இணைப்புகளுக்கு 'ஆன்லைன்' மூலம் மட்டுமே இணைப்புதாரர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த, 2010ம் ஆண்டு முதல் அரசு மற்றும் தனியார் கேபிள் இணைப்புகள் வழங்க டெண்டர் எடுத்தோர் குறித்த எந்த விவரமும் இவ்வலுவலகத்தில் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் ஏறத்தாழ, 3 லட்சம் வீடுகள், பலஆயிரம் வர்த்தக கட்டடங்கள் உள்ள நிலையில், சில ஆயிரம் செட்டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு கேபிள் இணைப்புகளை புறக்கணித்து தனியார் கேபிள் நிறுவனங்கள் கோலோச்சி வருகிறது. இதற்கு அதிகாரிகள் மட்டத்திலும் உடந்தையாக உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.