/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 5 ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி பெறலாம்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் யோசனை 5 ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி பெறலாம்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் யோசனை
5 ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி பெறலாம்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் யோசனை
5 ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி பெறலாம்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் யோசனை
5 ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி பெறலாம்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் யோசனை
ADDED : மார் 14, 2025 12:49 AM
திருப்பூர்; பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 34,350 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை எட்டியது. உள்நாட்டு சந்தை வாயிலாக, 27 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த துறையில் நேரடியாக ஆறு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மறைமுகமாக இரண்டு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பின்னலாடை தொழிலாளர்களில் 65 சதவீதம் பேர், கிராமப்புற பெண் தொழிலாளர்கள்.
வரும் 2030ல், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது என்கிற தமிழக முதல்வரின் தொலைநோக்குப்பார்வைக்கு, திருப்பூர் அதிக பங்களிப்பை செலுத்தும். எனவே, தமிழக பட்ஜெட்டில் ஜவுளித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களால் பெருமளவு முதலீடுகள் செய்ய இயலவில்லை. முதலீடு மற்றும் அதிக வட்டி காரணமாக இயந்திர இறக்குமதி தேக்கமடைந்துள்ளது. 25 சதவீத முதலீட்டு மானியமும், வட்டி மானியமும் வழங்கினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறை இருமடங்கு வளர்ச்சி அடையும்.
ஆடை உற்பத்தி துறையில் தற்போது, தையல் மெஷின் வாங்க மட்டுமே மாநில அரசு மானியம் வழங்கப்படுகிறது. நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என அனைத்து சார்பு தொழில்துறையினரின் இயந்திர கொள்முதலுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டும். மினி ஜவுளி பூங்கா அமைப்பதற்கு தடையாக உள்ள விதிமுறைகளை தளர்த்தவேண்டும்.
கோவை மெட்ரோ திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்; தொழிலாளர் தங்கும் விடுதி ஏற்படுத்த, 50 சதவீதம் கட்டுமான மானியம் அறிவிக்கவேண்டும். பின்னலாடை தொழில் துறைக்கு தனி வாரியம் உருவாக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.