/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருக்கல்யாண உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு திருக்கல்யாண உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருக்கல்யாண உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருக்கல்யாண உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருக்கல்யாண உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 10, 2024 10:25 PM

உடுமலை : உடுமலை மதுரை வீரன் கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை, யு.எஸ்.எஸ்., காலனியில் மதுரைவீரன் கோவில் உள்ளது. அப்பகுதியில், 57 ஆண்டுகளாக சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில்திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. காலையில், பக்தர்கள் திருத்தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் விநாயகர் கோவிலிலிருந்து, சக்தி அழைக்கும் வழிபாடு நடந்தது.
நேற்று காலை, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். காலை, 9:30 மணிக்கு மதுரைவீரன் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்வுகள் நடந்தன.
மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. இதில், யு.எஸ்.எஸ்., காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் இன்று காலை, 10:45 மணிக்கு சுவாமிக்கு மகா அபிேஷகம், பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
நாளை காலை விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.