/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பசுமைசார் உற்பத்திக்கு பிரத்யேக குறியீட்டு எண்; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பசுமைசார் உற்பத்திக்கு பிரத்யேக குறியீட்டு எண்; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
பசுமைசார் உற்பத்திக்கு பிரத்யேக குறியீட்டு எண்; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
பசுமைசார் உற்பத்திக்கு பிரத்யேக குறியீட்டு எண்; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
பசுமைசார் உற்பத்திக்கு பிரத்யேக குறியீட்டு எண்; ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
ADDED : ஜூலை 10, 2024 11:34 PM
திருப்பூர் : ''பசுமை சார் உற்பத்தியை பிரத்யேகமாக காண்பிக்க ஏதுவாக, தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க வேண்டும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய, மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.,) துறை செயலர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், நேற்று தொழில்துறையினரை சந்தித்தனர். மத்திய செயலர் தாஸ், மாநில செயலர் அர்ச்சனா பட்நாயக், மத்திய நிடி ஆயோக் தலைமை ஆலோசகர் இஸ்தியாக் அகமது ஆகியோர், ஆலோசனை மேற்கொண்டனர்.
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம்: பசுமை சார் உற்பத்தியின் வாயிலாக, 'பிராண்டிங் திருப்பூர்' என்ற நிலையை அடைந்துள்ளோம். வரும், 2027ம் ஆண்டுக்குள், முழுமையான பசுமை சார் உற்பத்தி மண்டலமாக திருப்பூர் மாறும். தேவையை காட்டிலும், ஐந்து மடங்கு அதிகமாக மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும், 13 கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது; 20 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கிறோம். பசுமை சார் உற்பத்தியை பிரத்யேகமாக காண்பிக்க ஏதுவாக, தனி குறியீட்டு எண் வழங்க வேண்டும்.
மானியத்துடன் சோலார் திட்டம்
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொருளாளர் மாதேஸ்வரன்:திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள், 17 பொது சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வருகின்றன; அவற்றில், மின் செலவு 45 சதவீதம் வரை ஏற்படுகிறது. மின் கட்டண சுமையை குறைக்க, 75 சதவீத மானியத்துடன் சோலார் கட்டமைப்பை நிறுவும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) இணைச்செயலாளர் கோபிநாத்:
திருப்பூர் பின்னலாடை தொழிலில், நிட்டிங் உள்ளிட்ட பல்வேறு 'ஜாப் ஒர்க்' பிரிவுகளும் உள்ளன. ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கான சலுகைகளை எங்களை போன்ற 'ஜாப் ஒர்க்' பிரிவினருக்கும் வழங்க வேண்டும். மின் கட்டண சுமையை சரிக்கட்ட, 50 சதவீத மானியத்துடன் சோலார் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
கடனுதவிக்கு புதிய திட்டம்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார்துரைசாமி:
திருப்பூர் பின்னலாடை தொழில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பொருளாதார ரீதியாக ஸ்தம்பித்துள்ளது. இயல்புநிலை திரும்பியிருப்பதால், தொழில்துறைக்கு கடனுதவி வழங்கும், புதிய திட்டத்தை தற்காலிகமாக செயல்படுத்த வேண்டும். முதலீட்டு மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
'டான்சிட்கோ' நிர்வாக ே மலாளர் மதுமதி, தொழில்துறை கமிஷனர் நிர்மல்ராஜ், கூடுதல் கமிஷனர் கிரேஸ் லால்ரிந்திகி பச்சா, ஜவுளித்துறை இயக்குனர் அணில்குமார் சிங், துணை செயலர் நேகா நுாட்டியல், துணை ஆலோசகர் உபேந்திரகுமார் குப்தா, ஆராய்ச்சி அலுவலர் அபிேஷகம் முகர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடுக்கப்பட்ட
கோரிக்கைகள்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், பி.எல்.ஐ., -2.0 திட்டம், 'ஏ-டப்' திட்டம், ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், வட்டி சமன்படுத்தும் திட்ட சலுகை, புதிய முதலீடுகளுக்கான முதலீட்டு மானியம், கொரோனா காலம் போன்ற அவசரகால கடன் உத்தரவாதம், பருத்தி இறக்குமதிக்கு, 11 சதவீத வரி விதிப்பு; 'டியூட்டி டிராபேக்' சலுகை நீட்டிப்பு, 45 நாட்களில் 'பேமென்ட்' திட்டத்தை நிறைவேற்றுதல், தொழிலாளர் தங்குமிட வசதி ஏற்படுத்தும் மானியம், ஜி.எஸ்.டி., தொடர்பான எழுந்துள்ள சவால்கள், தொழிலாளர் போக்குவரத்துக்கான சாலைவரி சலுகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
மத்திய பட்ஜெட் மீது
பெரும் எதிர்பார்ப்பு
திருப்பூர் பின்னலாடை தொழில்துறை, மூன்று ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்தது; இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தொழில்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்து, வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக உதவ வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டது.