/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூன்றாவது மொழி தேவை: மாணவர்கள் 'பளிச்' மூன்றாவது மொழி தேவை: மாணவர்கள் 'பளிச்'
மூன்றாவது மொழி தேவை: மாணவர்கள் 'பளிச்'
மூன்றாவது மொழி தேவை: மாணவர்கள் 'பளிச்'
மூன்றாவது மொழி தேவை: மாணவர்கள் 'பளிச்'
ADDED : மார் 14, 2025 12:50 AM

திருப்பூர்; புதிய கல்வி கொள்கை வலி யுறுத்தும், மூன்றாவது மொழி வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி, பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடமே கேட்டு விட்டோம். 'மூன்றாவதாக ஒரு மொழி கற்பதில் என்ன தவறு' இருக்கிறது என்று கேட்கின்றனர் மாணவர்கள்.
நவீன்குமார்: இன்றைய தலைமுறையினர் தமிழ் மொழியுடன் சேர்த்து அனைத்தையும் கற்று கொள்ள வேண்டும். மும்மொழி கல்வி முறை வேண்டும். பிடித்ததை எடுத்து படித்து கொள்ளலாம். கற்று வைத்து கொள்வது என்றைக்கும் உதவியாக இருக்கும். தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு துணையாக இருக்கும்.
கிருஷ்ணமூர்த்தி: புதிய கல்வி கொள்கை அனைவருக்கும் தேவையான ஒன்று. விருப்பமானதை தேர்ந்தெடுத்து படிக்க வாய்ப்பு உருவாகும். வெளி மாநிலம், வெளிநாடுகள் செல்லும் போது உதவியாக இருக்கும். பல மொழிகள் கற்று கொள்ளும் போது, எதிர்காலத்தில் கட்டாயமாக பயன்படும்.
ரேவதி: அனைத்து மொழியையும் படிக்க வேண்டும். தமிழ் உடன் சேர்த்து பிடித்த மொழியை படிக்கும் போது பல இடங்களில் நமக்கு துணையாக இருக்கும். தொழில், படிப்பு என வெளி இடங்களுக்கு செல்லும் போது பயன்படும். பல மொழிகளை கற்று கொள்ளும் போது, அறிவு, உலகம் புலப்படும்.
ஜெயலட்சுமி: மும்மொழியை படிப்பதில் எவ்வித பிரச்னையும் கிடையாது. நமக்கு பிடித்த மொழியில் கற்கும் போது உதவியாக இருக்கும். அனைத்து மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.
ஹர்ஷிதா: மும்மொழி கல்வி வருவது நல்லது. இது பயனுள்ள ஒன்று. மொழியை கற்று வைத்து கொள்வது, ஏதாவது ஒரு வகையில் பயன்படும். ஒன்றிரண்டு மொழியை மட்டும் பெரும்பாலானோர் தெரிந்து வைத்து கொள்கின்றனர். வேலை வாய்ப்பு, கல்வி, சொந்த வேலையாக செல்லும் போது என, பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஹரிஷ்: மும்மொழி கல்வி என்பது இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படும் ஒன்று. எதிர்காலத்தில் முக்கியம். தற்போது கல்லுாரிக்கு வந்த பின் கூடுதலாக பிெரஞ்சு மொழியை கற்று வருகிறேன். இதை அமல்படுத்தும் போது பள்ளியிலேயே எளிதாக கற்று கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வேலை, தொழில் போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும்.
லக்0ஷித்: பெரும்பாலானவர்கள் தமிழ், ஆங்கிலம் என, ஏதாவது இரண்டு மொழிகளை மட்டுமே தெரிந்துள்ளனர். தாய் மொழியை யாரும் விட சொல்லவில்லை. கூடுதலாக மொழி அறிவு கிடைக்கும் போது, நம்மை மெருகேற்ற முடியும். தொழில் நகரங்களுக்குசெல்லும் போது, மொழியின் தேவை புரியும். இது பள்ளி பருவத்திலே கிடைக்கும் போது, அனைவருக்குமான கல்வியாக மாறும்.
தினேஷ்குமார்: மும்மொழி கொள்கை என்பது, மூன்றாவதாக ஒரு மொழியை கற்க கூடியதாகும். தனியார் பள்ளிகளில் மட்டுமே, மூன்று மொழிகள். சில பள்ளிகளில் ஹிந்தி, பிரெஞ்சு போன்ற மொழிகள் இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி சமமாக இருக்க வேண்டும்.
புதிய கல்வி முறை வரும் போது கூடுதல் மொழி அறிவு கிடைக்கும்.