/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேர்த்திருவிழா: வரும் 17ல் குட்டை திடல் ஏலம் தேர்த்திருவிழா: வரும் 17ல் குட்டை திடல் ஏலம்
தேர்த்திருவிழா: வரும் 17ல் குட்டை திடல் ஏலம்
தேர்த்திருவிழா: வரும் 17ல் குட்டை திடல் ஏலம்
தேர்த்திருவிழா: வரும் 17ல் குட்டை திடல் ஏலம்
ADDED : மார் 11, 2025 10:39 PM
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, குட்டைத்திடலில் பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க, வரும் 17ம் தேதி ஏலம் நடக்கிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் ஏப்., 1ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. 8ம் தேதி, கம்பம் போடுதல், 10ம் தேதி, கிராம சாந்தி, 11ம் தேதி, கொடியேற்றம், பூவோடு ஆரம்பம், 15ல், பூவோடு நிறைவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஏப்., 17ம் தேதியும், பரிவேட்டை, வாணவேடிக்கை, 18ம் தேதியும், 19ம் தேதி, கொடியிறக்கம், மகா அபிேஷகம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு, உடுமலை குட்டை திடலில், ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறுவ, வருவாய்த்துறை சார்பில், வரும், 17ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.
குறைந்த பட்ச ஏலத்தொகையாக, ஒரு கோடியே, 9 லட்சத்து, 12 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏல முன் வைப்பு தொகையாக, 27 லட்சத்து, 28 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.