ADDED : ஜூன் 25, 2024 12:55 AM
திருப்பூர்;காங்கயம், தாராபுரம் ரோடு, களிமேட்டை சேர்ந்தவர் சாலமன், 59; மெக்கானிக். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கடை வீதிக்கு சென்றார்.
பின் மதியம் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, நான்கு சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.