ADDED : ஜூன் 03, 2024 01:14 AM

பல்லடம்:
பல்லடம் அடுத்த, அருள்புரம், உப்பிலிபாளையம், - சேகாம்பாளையம் செல்லும் ரோட்டில், அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பனியன் நிறுவனங்கள், குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.
ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர், தொழிலாளர்கள் பயன் படுத்தும் இந்த ரோடு, மழையில் கரைந்து பல் இளித்து வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த காலத்தில் குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்த இந்த ரோடு, பல்வேறு போராட்டத்துக்குப் பின், இரண்டு ஆண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ரோடு புதுப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், தற்போது மீண்டும் பல் இளித்து வருகிறது.
ரோட்டின் பல இடங்களில் குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குட்டைகள் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், இந்த ரோட்டை பயன் படுத்தும் மாணவ மாணவியர், கரடு முரடான ரோட்டில் விழுந்து காயமடைய வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலான மாணவ மாணவியர் சைக்கிள் களை பயன்படுத்துவதால், ரோட்டை புதுப்பிக்க வேண்டும். தரமுள்ள ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.