/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நுாற்றாண்டு பழமை கோவில் திருப்பணி துவங்க தீவிரம் நுாற்றாண்டு பழமை கோவில் திருப்பணி துவங்க தீவிரம்
நுாற்றாண்டு பழமை கோவில் திருப்பணி துவங்க தீவிரம்
நுாற்றாண்டு பழமை கோவில் திருப்பணி துவங்க தீவிரம்
நுாற்றாண்டு பழமை கோவில் திருப்பணி துவங்க தீவிரம்
ADDED : ஜூன் 05, 2024 12:29 AM
பல்லடம்;பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், பொங்காளியம்மன் கோவிலில் நடந்தது.
பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. நுாற்றாண்டுக்குப் பின், இக்கோவிலில் திருப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பல்வேறு இடையூறுகள் காரணமாக திருப்பணி தடைபட்டு வந்தது.
திருப்பணியை நடத்தியே ஆக வேண்டும் என, விழா குழுவினர், பக்தர்கள் தீர்மானித்தனர். திருப்பணி துவங்கும் முன், நுழைவாயிலில் உள்ள அறநிலையத்துறைக்கு உட்பட்ட கடைகளை அகற்றியாக வேண்டும் என்று கூறப்பட்டது. கடை உரிமையாளர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்களுடன் விழா குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இரண்டாவது கட்ட ஆலோசனைக்கூட்டம், பொங்காளியம்மன் கோவிலில் நடந்தது. கோவில் செயல் அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். விழா குழுவினர் முன்னிலை வகித்தனர்.
கோவில் திருப்பணி மேற்கொள்வதை முன்னிட்டு, நுழைவாயிலில், 26 அடி இடம் ஏற்படுத்தித் தர வேண்டும். கோவிலுக்கு சொந்தமான கடைகளை இடித்து மீண்டும் கட்டுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
திருப்பணி துவங்கும் நாள் தேர்வு செய்வதற்காக, அறநிலையத்துறை சார்பில் மூன்று தேதிகள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வாறு, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாகாளியம்மன் கோவில் திருப்பணி, விழா குழுவினரின் நடவடிக்கையால் வேகமெடுத்துள்ளது.