Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல... கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள்

பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல... கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள்

பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல... கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள்

பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல... கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள்

ADDED : ஜூலை 26, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சீனிவாசன், வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து:

தென் மேற்கு பருவமழை சிறப்பாக பெய்து வருகிறது. பி.ஏ.பி., தொகுப்பணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளன. ஆக., முதல் வாரத்தில் திருமூர்த்திக்கு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்குமுன்னரே, தாராபுரம் உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்கவேண்டும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், உப்பாறு விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

தாராபுரம், மாம்பாடி கிராமத்தில், விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி, அமராவதி ஆற்றுப்புறம்போக்கு பகுதியில் மோட்டார் வைத்து, தண்ணீர் திருடி விற்பனை செய்கின்றனர். இது குறித்து ஆதாரத்தோடு புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி:

பல்லடம், ஊத்துக்குளி, பெருமாநல்லுார், தொரவலுார், மேற்குபதி, ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், பட்டம்பாளையம் பகுதிகளில், மயில், மான்கள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. மின் கம்பியில் பட்டோ, நாய்களாலோ அல்லது பூச்சிக்கொல்லிகளாலோ மயில்கள் இறந்தால், அருகாமையில் உள்ள விவசாயிகள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். விலங்குகளால் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்கப்படுவதில்லை. மயில், மான்கள் விவசாய நிலங்களுக்குள் புகாதவாறு வனத்துறையினர் தடுக்கவேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்க தலைவர் ஞானபிரகாசம்:

திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை, 40 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.

பி.ஏ.பி., கரைப்புதுார் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மரகதம் வேலுச்சாமி:

காண்டூர் கால்வாய் பணியை உடனடியாக நிறுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவேண்டும். திருப்பூர் கிளை கால்வாய் முழுமையாக துார்வாரவேண்டும். கால்வாய் பராமரிப்புக்கான நிதியை, பாசன சங்கங்களுக்கு வழங்கவேண்டும். நடப்பு மண்டலத்தில் பாசன வசதி பெறும் ஷட்டர்களை பழுதுநீக்கவேண்டும்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலவர் பாலதண்டபாணி:

அமராவதி சர்க்கரை ஆலையை முழுமையாக சீரமைக்கவேண்டும். சர்க்கரை ஆலையில், கரும்பு பிரிவுக்கு தேவையான அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களை நியமிக்கவேண்டும். கரும்பு பதிவு பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எங்கள் குறைகளை கேட்டால் மட்டும்போதாது; பிரச்னைகளை தீர்த்து வைக்கவேண்டும். எங்கள் நியாயமான கேள்விகளுக்கு, சரியான பதிலளிக்கவேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தினர்

மாவட்ட அதிகாரிகள் 'ஆப்சென்ட்'

பெரும்பாலான அரசு துறை அதிகாரிகள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஊழியர் மட்டத்திலான இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை அலுவலர்களே பங்கேற்றனர். அவர்களால், விவசாயிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அடுத்த குறைகேட்பு கூட்டத்தில், அனைத்து துறை சார்ந்த மாவட்ட முதல்நிலை அதிகாரிகளை பங்கேற்கச் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us