/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில கேரம் போட்டி திருப்பூரில் நடக்கிறது மாநில கேரம் போட்டி திருப்பூரில் நடக்கிறது
மாநில கேரம் போட்டி திருப்பூரில் நடக்கிறது
மாநில கேரம் போட்டி திருப்பூரில் நடக்கிறது
மாநில கேரம் போட்டி திருப்பூரில் நடக்கிறது
ADDED : ஜூலை 26, 2024 11:46 PM
திருப்பூர்;திருப்பூரில் நாளை துவங்கி இரண்டு நாள் மாநில கேரம் போட்டி நடக்கவுள்ளது.
முத்தம்மாள் - திலகமணி நினைவு கோப்பைக்கான மாநில கேரம் போட்டி, திருப்பூரில் நாளை (28ம் தேதி) துவங்கி, நாளை மறுநாள் (29ம் தேதி) வரை நடக்கிறது. தமிழ்நாடு கேரம் அசோசியேஷன், மாவட்ட கேரம் சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டியில் மாநிலம் முழுதும் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஒற்றையர் பிரிவுக்கான இப்போட்டி, திருப்பூர், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் போட்டிகள் நடக்கிறது.