/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரச்னைக்கு தீர்வு நாடிய மக்கள் சந்திப்பு இயக்கம் பிரச்னைக்கு தீர்வு நாடிய மக்கள் சந்திப்பு இயக்கம்
பிரச்னைக்கு தீர்வு நாடிய மக்கள் சந்திப்பு இயக்கம்
பிரச்னைக்கு தீர்வு நாடிய மக்கள் சந்திப்பு இயக்கம்
பிரச்னைக்கு தீர்வு நாடிய மக்கள் சந்திப்பு இயக்கம்
ADDED : ஜூலை 29, 2024 12:21 AM

திருப்பூர்:பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கோரி மா.கம்யூ., கட்சி சார்பில், திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில், ராக்கியாபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் பகுதிகளில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. ராக்கியாபாளையத்தில் நடந்த கூட்டத்துக்கு, கிளை செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
திருப்பூர் நகரப்பகுதியில் நான்கு இடங்களிலும், வேலம்பாளையம் பகுதியிலும், செங்கப்பள்ளி ஊராட்சி கிளை சார்பிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. ஒவ்வொரு பகுதிகளின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.