ADDED : ஜூலை 29, 2024 12:20 AM

திருப்பூர்:கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி,மு.க., மாணவர் அணி, முத்தம்மாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து, முத்தம்மாள் மற்றும் திலகமணி நினைவு கோப்பைக்கான, அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டிகளை நடத்துகின்றன.
ராமசாமி - முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்த துவக்க விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் திலகராஜ் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய்; 2வது பரிசு 50 ஆயிரம் ரூபாய்; 3வது பரிசு 25 ஆயிரம் ரூபாய்; 4வது பரிசு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்; கோப்பைகள் உண்டு. முதல் பரிசு பெறுபவருக்கு திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் ஒரு பவுன் தங்க நாணயம்; 2,3 மற்றும் 4வது பரிசாக தலா அரைப் பவுன் தங்க நாணயம் வழங்குகிறது.
தமிழ்நாடு கேரம் சங்க தலைவர் நாசர் கான், தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயம், மகாராஷ்டிரா கேரம் சங்க செயலாளர் அருண் கேதர், தமிழ்நாடு கேரம் சங்க சீனியர் துணைத் தலைவர் சிவக்குமார், திருப்பூர் மாவட்ட சங்க தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்றும் போட்டி நடக்கிறது.
----
திருப்பூர் ராமசாமி - முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தேசிய கேரம் போட்டி நேற்று துவங்கியது.