/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் ஸ்டாண்ட் நுழைந்த 'நொடி'; தாங்காது 'நெடி' பஸ் ஸ்டாண்ட் நுழைந்த 'நொடி'; தாங்காது 'நெடி'
பஸ் ஸ்டாண்ட் நுழைந்த 'நொடி'; தாங்காது 'நெடி'
பஸ் ஸ்டாண்ட் நுழைந்த 'நொடி'; தாங்காது 'நெடி'
பஸ் ஸ்டாண்ட் நுழைந்த 'நொடி'; தாங்காது 'நெடி'
ADDED : ஜூன் 07, 2024 12:38 AM

பல்லடம்;பல்லடம் பஸ் ஸ்டாண்டில், மூக்கைத் துளைக்க வைக்கும் 'நெடி'யால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எந்நேரமும் பொதுமக்கள் மிகுந்து பரபரப்பாக காணப்படும். பஸ் ஸ்டாண்டுக்கு, தினசரி, 200க்கும் அதிகமான பஸ்கள், மினி பஸ்கள் உள்ளிட்டவை வந்து செல்கின்றன.
கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ளதால், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, நுாற்றுக்கணக்கான வெளியூர் செல்லும் பயணிகளும் வந்து செல்லும் இடமாக இந்த பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
பல்லடம் நகராட்சியின் இலவச கழிப்பிடம், பஸ் ஸ்டாண்டின் நுழைவாயிலிலேயே உள்ளது. சுகாதாரத்துடன் கழிப் பிடம் பராமரிக்கப்படுவதில்லை. பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள மழை நீர் வடிகாலில், திறந்த வெளியில் கழிப்பிட கழிவுநீர் கலந்து விடப்படுகின்றன.
தினசரி, ஆயிரக்கணக்கான பயணிகள் பொதுமக்கள் வந்து செல்லும் பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழையும் போதே, துர்நாற்றம் காரணமாக ஏற்படும் 'நெடி'யால் பயணிகள், பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது, பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. நுழைவாயிலில் உள்ள கழிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதுடன், முறையாக பராமரித்து பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.