Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ யோகா வாழ்க்கையின் நுழைவாயில் வாயைக் கட்டுப்படுத்துதல் முதல்படி

யோகா வாழ்க்கையின் நுழைவாயில் வாயைக் கட்டுப்படுத்துதல் முதல்படி

யோகா வாழ்க்கையின் நுழைவாயில் வாயைக் கட்டுப்படுத்துதல் முதல்படி

யோகா வாழ்க்கையின் நுழைவாயில் வாயைக் கட்டுப்படுத்துதல் முதல்படி

ADDED : ஜூன் 21, 2024 01:56 AM


Google News
திருப்பூர்:யோகா வாழ்க்கையின் நுழைவு வாயில். உணவு சாப்பிடுதல், பேசுதல் என்ற இரு செயல்களைச் செய்யும் வாயைக் கட்டுப்படுத்தும் முதல்படியை யோகா செய்கிறது.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் கூறியதாவது:ஆண்டுதோறும் ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை நம் தேசம் மிக சிறந்த முறையில் கொண்டாடுகிறது. ஞானிகள், ரிஷிகள், யோகிகள் வாழ்ந்த காலத்தில் எப்படி உன்னத நிலைக்கு வாழ முடிந்ததே, அந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தது யோகா. இதன் மூலம், உடலும், மனதும் ஆரோக்கியமாக இருந்தது. இன்றைக்கு உடல் ஆரோக்கியதற்கு, 'ஜிம்'முக்கு செல்வது போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறோம். மன ஆரோக்கியதுக்கு, யோகா மிகவும் உதவுகிறது. உடலையும், மனதையும் சேர்த்து நல்ல வழிக்கு கொண்டு செலுத்தும்.

சாஸ்திரங்கள் சொல்லும் விஷயம்

நம் சாஸ்திரங்கள் யோகாவை பற்றி நிறைய விஷயங்களை கூறியுள்ளது. யோகா வாழ்க்கையின் நுழைவு வாயில். இந்த வாயை கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த வாய் தான், இரு விதமான காரியங்களை செய்கிறது. ஒன்று உணவு சாப்பிடுதல், மற்றொன்று பேசுவது. இதை கட்டுப்படுத்துவதின் முதல்படியை யோகா சொல்கிறது.

யோகா என்றால் இணைதல்

இதைத் தொகுத்து அஷ்டாங்க யோகம் என்று சொல்லப்படும், எட்டு அங்கங்களாக பிரித்து சொன்னது பதஞ்சலி மகாமுனிவர். இந்த யோகம், நம்மை மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கும், அதிலிருந்து தெய்வ நிலைக்கும் உயர்த்தி கொண்டு செல்லும். யோகா என்றால் இணைதல் என்று அர்த்தம். இந்த எட்டுப்படிகள் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

சுவாமி விவேகானந்தர் வழி

சுவாமி விவேகானந்தர், இந்த யோகத்தை, நான்காக பிரித்தார். கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம், ஞான யோகம். அதில், ராஜ யோகத்தில் தான், இந்த யோகாசனம் போன்றவை இடம் பெற்றுள்ளன. உடம்பைப் புனிதமாக வைக்க வேண்டும். உலகில் உள்ள இன்பங்களை எல்லாம் வாங்கி குவிப்பது அனுபவிப்பதற்காக அல்ல. இந்த உடலைச் சந்தோஷப்படுத்த மக்கள் திசை மாறி சென்று விட்டனர். இந்த யுகத்தில் உடல் என்பது, தர்மத்தை செய்வதற்கான சாதனம்.

இந்தக் கலைகளை வெளிநாட்டில் பரப்பியதில், சுவாமி விவேகானந்தருக்கு முக்கிய பங்கு உண்டு. விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு இதை கற்றுக்கொடுக்க சென்ற முதல் நபர். அப்படிப்பட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது தான், இந்த யோகா.

இவ்வாறு, அவர் கூறினார்.

---

செந்தில் நாதன்

அஷ்டாங்க யோகா

எட்டு படி நிலைகள்

இயமம் - தீய எண்ணம், தீய செயல்களை விலக்குதல்

நியமம் - ஒழுக்க நெறி நாடி நிற்றல்

ஆசனம் - உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சி; அது சார்ந்த நிலை.

பிராணாயாமம் - உடலின் எண்ணங்கள், செயல்களைக் கட்டுப்படுத்துதல்; மூச்சுப்பயிற்சி

பிரத்தியாகாரம் - மனதை உள்நோக்கித் திருப்புதல்.

தாரணை - மனதை அங்கேயே நிலைநிறுத்துதல்

தியானம் - மனம் அகத்திலே நிலை பெறுதல்.

சமாதி நிலை - தியானத்தில் நிலைபெறப் பயில்தல்; பூரண நிலை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us