/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண் கெட்ட பிறகு ' சூரிய நமஸ்காரம்? ' கண் கெட்ட பிறகு ' சூரிய நமஸ்காரம்? '
கண் கெட்ட பிறகு ' சூரிய நமஸ்காரம்? '
கண் கெட்ட பிறகு ' சூரிய நமஸ்காரம்? '
கண் கெட்ட பிறகு ' சூரிய நமஸ்காரம்? '
ADDED : ஜூன் 21, 2024 01:56 AM

பல்லடம்:அணை தடுப்புச்சுவரில் ஏற்பட்ட சிறிய ஓட்டையை அடைக்காமல் விட்டதன் விளைவு, ஓட்டை பெரிதாகி, அணை உடைந்து ஊரே மூழ்கிய சம்பவங்கள் சரித்திரத்தில் உண்டு.
பல்லடம் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள குட்டையின் பழுதடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால், 'ஐந்தாண்டு திட்டம்' தீட்டி ஓட்டையை அடைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு நுாதனமாக மனு அனுப்பியுள்ளனர்.
இன்னும் அரசு செவிசாய்க்காவிட்டால் அது கண் கெட்டபிறகு 'சூரிய நமஸ்காரம்' செய்ததைப் போன்றுதான் அமையும்.
பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள, பெரிய குட்டை நீர் ஆதாரமாக உள்ளது.
இதன் தடுப்புச் சுவர் சேதமடைந்து ஓட்டை விழுந்துள்ளது. தண்ணீர் கசிந்து வெளியேறி வருவதால், சேகரித்து வைத்துள்ள மழைநீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் போவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தடுப்புச்சுவரை சீரமைத்து, மழை நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இப்பகுதி மக்கள், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை. இப்பகுதி பொதுமக்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:
இப்பகுதியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டமும் இல்லாததால், மழை நீரை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. பெரிய குட்டை தடுப்புச் சுவரை சீரமைத்து தருமாறு, கடந்த ஆறு ஆண்டுக்கு மேலாக கோரிக்கை விடுத்தும், ஊராட்சி, ஒன்றியம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என, யாருமே கண்டு கொள்ளவில்லை 'ஐந்தாண்டு திட்டம்' தீட்டி, தடுப்புச் சுவர் ஓட்டையை அடைத்து மழைநீர் சேகரித்து வைக்க வழிவகை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.