Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி இழுபறி; பாதியில் நிறுத்தப்பட்ட பணியால் பாதிப்பு

தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி இழுபறி; பாதியில் நிறுத்தப்பட்ட பணியால் பாதிப்பு

தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி இழுபறி; பாதியில் நிறுத்தப்பட்ட பணியால் பாதிப்பு

தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி இழுபறி; பாதியில் நிறுத்தப்பட்ட பணியால் பாதிப்பு

ADDED : மார் 12, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
உடுமலை; உடுமலை தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணி, பல ஆண்டுகளாகியும் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது.

உடுமலை பகுதியிலுள்ள ஏழு குளங்களிலிருந்து வரும் நீர் ஓட்டுக்குளம் நிரம்பியதும், தங்கம்மாள் ஓடை வழியாக சென்று, உப்பாறு ஓடையில் கலந்து வருகிறது. மேலும், சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீரும், இந்த ஓடையில் கலக்கிறது.

உடுமலை நகரின் மையப்பகுதியில் ஓடும் தங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து, ஏராளமான வீடுகள் அமைந்திருந்தன.

அதோடு, பொள்ளாச்சி ரோட்டையும், தளி ரோடு, குட்டைத்திடல் பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடமாகவும் இருந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 15 ஆண்டுக்கு முன், ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து, மத்திய அரசு நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ், 48 லட்சம் ரூபாய் செலவில், பொள்ளாச்சி ரோடு சந்திப்பு முதல் தலைகொண்டம்மன் கோவில் வரை, 300 மீட்டர் நீளத்திற்கு ரோடு அகலப்படுத்தும் பணியும், வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில், ஓடை கரையில், வெள்ளத்தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, நகராட்சி நுாற்றாண்டு விழா நிதியின் கீழ், முழுமையாக திட்ட மதிப்பீடு தயாரித்து பணி துவங்கியது.

இப்பணியில், ஒட்டுக்குளம் முதல், உப்பாறு ஓடை வரை, தங்கம்மாள் ஒடையில் இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் மற்றும் நீர் செல்லும் வழித்தடத்தில் கான்கிரீட் சிலாப் தளம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இப்பணி துவங்கி, 5 ஆண்டுக்கு மேலாகியும், பணிகள் முழுமையடையாமல், கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி, ஓட்டுக்குளம் முதல், நகரப்பகுதி வரை நிலுவையிலுள்ளது.

தளம் மற்றும் கரை அமைக்க கொண்டு வரப்பட்ட கான்கிரீட் சிலாப்கள் பயன்படுத்தாமல், வீணாக உள்ளது.

அதே போல், மண் பரப்பாக உள்ளதோடு, சாக்கடை கழிவு நீர் ஓடி வருவதோடு, குப்பையும் கொட்டப்படுவதால், தங்கம்மாள் ஓடை முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. துார்வாரப்படாமல், மண், பிளாஸ்டிக் கழிவுகள் ஓடையில் தேங்கியுள்ளது.

இதனால், மழை காலங்களில் வெள்ள அபாயம் உள்ளதோடு, கழிவு நீர் தேங்கி வருவதால், கொசு உற்பத்தி, துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us