/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை 243ஐ ரத்து செய்ய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 10:44 PM

பல்லடம்;ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, பல்லடத்தில், தமிழக ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் வட்டார தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் காஞ்சனா தேவி மற்றும் திருப்பூர் மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்தாய்வு முடியும் வரை, கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு செல்வது, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் தயாநிதி, மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
---
பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.