பரதநாட்டிய தேர்வு மாணவியர் அபாரம்
பரதநாட்டிய தேர்வு மாணவியர் அபாரம்
பரதநாட்டிய தேர்வு மாணவியர் அபாரம்
ADDED : ஜூலை 09, 2024 10:44 PM

அவிநாசி:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தொலைதுார கல்வி மையம் சார்பில் பரதநாட்டிய வாரியத் தேர்வுகள் அவிநாசியில் உள்ள சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடத்தில் நடைபெற்றது.
இத்தேர்வுகளில், 60 மாணவியர் பங்கேற்றனர். தேர்வுகளை அண்ணாமலை பல்கலை பேராசிரியர் மேற்பார்வையில் சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடம் சார்பில், குரு தேவிகா மாணவியருக்கு தேர்வு பாடங்களை பயிற்றுவித்து பங்கேற்க வைத்தார். தேர்வுக்கான ஏற்பாடுகளை பரதநாட்டிய கலைக்கூட தாளாளர் வடிவேல் செய்திருந்தார்.
---
பரதநாட்டிய தேர்வில் பங்கேற்ற மாணவியர்.