/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் சாலை மறியல் ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் சாலை மறியல்
ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் சாலை மறியல்
ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் சாலை மறியல்
ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் சாலை மறியல்
ADDED : ஜூலை 08, 2024 10:56 PM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்க பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு ஆசியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. போதிய ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி நேற்று மாலை பெற்றோர் சாமுண்டிபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போதிய ஆசிரியர் நியமிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியதால், பெற்றோர் கலைந்து சென்றனர்.