/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மதுக்கடைக்கு எதிராக மக்கள் வைத்த பேனர் கிழிப்பு மதுக்கடைக்கு எதிராக மக்கள் வைத்த பேனர் கிழிப்பு
மதுக்கடைக்கு எதிராக மக்கள் வைத்த பேனர் கிழிப்பு
மதுக்கடைக்கு எதிராக மக்கள் வைத்த பேனர் கிழிப்பு
மதுக்கடைக்கு எதிராக மக்கள் வைத்த பேனர் கிழிப்பு
ADDED : ஜூலை 08, 2024 10:57 PM

திருப்பூர்:திருப்பூரில், மதுக்கடைக்கு எதிராக மக்கள் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், பல்லடம் ரோட்டில் இருந்து கருப்பகவுண்டம்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் பாருடன் கூடிய மதுக்கடை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்கள் சார்பில், மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பகவுண்டம்பாளையம் ரோட்டில் சில இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை தற்போது கிழிக்கப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
---
கருப்பகவுண்டன்பாளையம் ரோட்டில், 'டாஸ்மாக்' மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வைத்துள்ள பேனரை, விஷமிகள் கிழித்துள்ளனர்.