/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழங்கால கோவிலை புதுப்பிக்க ஆய்வு; கிராம மக்கள் மகிழ்ச்சி பழங்கால கோவிலை புதுப்பிக்க ஆய்வு; கிராம மக்கள் மகிழ்ச்சி
பழங்கால கோவிலை புதுப்பிக்க ஆய்வு; கிராம மக்கள் மகிழ்ச்சி
பழங்கால கோவிலை புதுப்பிக்க ஆய்வு; கிராம மக்கள் மகிழ்ச்சி
பழங்கால கோவிலை புதுப்பிக்க ஆய்வு; கிராம மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 17, 2024 08:43 PM

உடுமலை : உடுமலை அருகே, பழமையான கோவிலை புதுப்பிப்பது குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில், பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் பராமரிப்பு மற்றும் இதர சேவைகளுக்காக, தளி பாளையக்காரர் எத்தலப்பரால், நிலங்கள் அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவில், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், கும்பாபிேஷகமும் நடத்தப்படாமல் உள்ளது.
சமீபத்தில், கோவிலுக்கு தமிழக அரசால் அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டனர்; மேலும், கொங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, அரசுக்கு மனு அனுப்பினர்.
இதையடுத்து, செயல் அலுவலர் அமரநாதன், மண்டல ஸ்தபதி செந்தில்ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர், நேற்று செல்லாண்டியம்மன் கோவிலில் ஆய்வு செய்தனர்.
ஹிந்து அறநிலையத்துறையினர் கூறுகையில், 'நலிவடைந்த கோவில்கள் புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியிலுள்ள சில கோவில்களில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன'.
'திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதால், பழமை மாறாமல் புதுப்பிக்க, கருத்துரு பெறப்பட்டு, அரசு அனுமதிக்கு அனுப்பப்படும்,' என்றனர்.
ஆய்வின் போது, கோவில் அறங்காவலர் குழுவினர், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
நீண்ட காலத்துக்குப்பிறகு, கோவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கொங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.