/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேகமாக நிரம்பும் அமராவதி; 80 அடியை தொட்டதால் மகிழ்ச்சி வேகமாக நிரம்பும் அமராவதி; 80 அடியை தொட்டதால் மகிழ்ச்சி
வேகமாக நிரம்பும் அமராவதி; 80 அடியை தொட்டதால் மகிழ்ச்சி
வேகமாக நிரம்பும் அமராவதி; 80 அடியை தொட்டதால் மகிழ்ச்சி
வேகமாக நிரம்பும் அமராவதி; 80 அடியை தொட்டதால் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 17, 2024 08:45 PM
உடுமலை : உடுமலை அருகேயுள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மூன்று நாட்களில், 17.56 அடி நீர் மட்டம் உயர்ந்து, நேற்று மாலை 80 அடியாக உயர்ந்தது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, மூணாறு, தலையாறு, கொடைக்கானல் மலை மேற்கு பகுதி மற்றும் வால்பாறை கிழக்கு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அணைக்கு நீர் வரத்துள்ள பிரதான ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த, 14ம் தேதி, அணை நீர் மட்டம், 62.73 அடியாக இருந்தது. கடந்த, மூன்று நாட்களில், 17.56 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 80.29 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான,, 4,047 மில்லியன் கனஅடியில், 3,199.79 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 4,217 கன அடி நீர்வரத்து இருந்தது. இதே நிலை நீடித்தால், ஒரு சில நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.