/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு
புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு
புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு
புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 29, 2024 11:16 PM

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. புலிகள் போல் வேடமிட்டு மாணவர்கள் வந்திருந்தனர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
வனவர் உமாமகேஸ்வரி பேசுகையில்,''இந்தியாவில், 4 ஆயிரம் புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். பேராசைக்காக புலியை கொல்லக்கூடாது, அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்,'' என்றார். புலிகள் போன்று வேடமிட்டு, நடனமாடி, பிரமிடு உருவாக்கி, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.