/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம் அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம்
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம்
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம்
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : ஜூன் 12, 2024 12:35 AM

பல்லடம்;பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்து வரும் கலந்தாய்வில், மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
பல்லடம் அரசு கல்லுாரியில், 2024--25ம் கல்வி ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்காக, நிர்ணயிக்கப்பட்ட, 500 இடங்களுக்கு, 6,044 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த, மே 30ல், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு சேர்க்கை நடந்தது. தொடர்ந்து, பிளஸ் 2 மதிப்பெண் தரவரிசையின்படி, அனைத்து பாடங்களுக்குமான பொதுவான கலந்தாய்வு, 10ம் தேதி துவங்கியது.
நேற்று, 302 முதல் 287 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு, காலை, 9.00 முதல் மதியம் 1.00 மணி வரையும், 286 -- 274 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு, மதியம், 1.30 முதல் மாலை 4.30 மணி வரையும் கலந்தாய்வு நடந்தது. பேராசிரியர் குழுவினர் மாணவர்களின் சான்றுகளை சரிபார்த்து, கலந்தாய்வில் ஈடுபட்டனர்.
இன்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான கலந்தாய்வும், நாளை, 273 -- 263 மதிப்பெண் பெற்றவர்களுக்கான பொது கலந்தாய்வும் நடக்க உள்ளதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.