/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதல் கையெழுத்தாக நதிநீர் இணைப்பு பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகள்! முதல் கையெழுத்தாக நதிநீர் இணைப்பு பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகள்!
முதல் கையெழுத்தாக நதிநீர் இணைப்பு பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகள்!
முதல் கையெழுத்தாக நதிநீர் இணைப்பு பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகள்!
முதல் கையெழுத்தாக நதிநீர் இணைப்பு பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகள்!
ADDED : ஜூன் 12, 2024 12:33 AM
பல்லடம்;நதிநீர் இணைப்பு திட்டம் பிரதமரின் முதல் கையெழுத்தாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்த்த விவசாயிகள், இந்த ஆட்சி காலத்திலாவது இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
விவசாயிகளின் நலன் கருதும் திட்டத்துக்கு பிரதமர் முதல் கையெழுத்திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், இதை மட்டுமே நம்பி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படாது. நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் முதல் கையெழுத்திட்டிருந்தால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பாராட்டைப் பெற்றிருக்க முடியும்.
ஏனென்றால், பிரதமர் மோடி முதல்முறையாக, 2014ல் பொறுப்பேற்ற போது, அவரே அளித்த வாக்குறுதியாகும். எனவே, அவர் அளித்த வாக்குறுதியை வரும் காலத்திலாவது நிறைவேற்ற வேண்டும். கர்நாடகா, கேரளா, ஆந்திரா என, அண்டை மாநிலங்களுடன் தண்ணீருக்காக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட வேண்டிய நிலை உள்ளது. நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே இதற்கு தீர்வு.
இதேபோல், மத்திய அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்றால், தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களின் வயது வரம்பை, 50க்கு மேல் உயர்த்த வேண்டும். குறைந்த வயதுடையவர்களை இத்திட்டத்தில் சேர்ப்பதால், விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்காமல், விவசாயிகள் சாகுபடி பரப்பளவை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.