/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆற்றங்கரையில் மாயமாகி வரும் 'படித்துறை' மீட்க தேவை நடவடிக்கை ஆற்றங்கரையில் மாயமாகி வரும் 'படித்துறை' மீட்க தேவை நடவடிக்கை
ஆற்றங்கரையில் மாயமாகி வரும் 'படித்துறை' மீட்க தேவை நடவடிக்கை
ஆற்றங்கரையில் மாயமாகி வரும் 'படித்துறை' மீட்க தேவை நடவடிக்கை
ஆற்றங்கரையில் மாயமாகி வரும் 'படித்துறை' மீட்க தேவை நடவடிக்கை
ADDED : ஜூன் 11, 2024 12:09 AM

உடுமலை:ஆற்றின் படித்துறை பராமரிப்பில்லாமல், இடிந்து விழும் நிலையில் இருப்பதுடன், சுகாதார சீர்கேடும், நிலவுவதால், கல்லாபுரம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை ஒன்றியம், கல்லாபுரம் ஊராட்சியில், 1,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அமராவதி ஆற்றங்கரையில், மேடான பகுதியில், இக்கிராம குடியிருப்புகள் அமைந்துள்ளது.
முன்பு, ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்துச்செல்லவும், இதர தேவைகளுக்காகவும், படித்துறை அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, படித்துறை முறையாக பராமரிக்கப்படாமல், படிகள் இடிந்து விழத்துவங்கியது. மேலும், அவ்விடத்தில், வைக்கப்பட்ட குப்பைத்தொட்டி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது.
அங்கு குவிந்திருந்த குப்பையை ஊராட்சி நிர்வாகமும் அகற்றவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் அகற்றப்படாமல், துர்நாற்றம் வீசி வருகிறது.
இத்தனை தடைகளை தாண்டி, ஆற்றுக்குச்சென்றால், அங்கு நீர் தேங்கும் பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இதனால், ஆற்று நீரை பயன்படுத்த முடியாமல், மக்கள் திரும்பி வர வேண்டியுள்ளது.
முன்பு கிராமத்தின் முக்கிய மையமாக பராமரிக்கப்பட்டு வந்த படித்துறை, தற்போது பரிதாப நிலைக்கு மாறி விட்டது. எந்த தேவைக்கும் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் அவ்விடத்தில் ஆய்வு செய்து, சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; படித்துறையை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆற்றின் வழியெங்கும்...
அமராவதி ஆற்றங்கரையில் செழித்திருந்த கிராமங்களுக்கும், ஆற்றுக்கும், முக்கிய இணைப்பு மையமாக படித்துறைகள் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டமைப்பு தற்போது அனைத்து கிராமங்களிலும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை.
நீர்நிலைகள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள படித்துறைகளை மீட்க, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.