/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புள்ளியியல் தரவு தருமே சிறந்த தீர்வு புள்ளியியல் தரவு தருமே சிறந்த தீர்வு
புள்ளியியல் தரவு தருமே சிறந்த தீர்வு
புள்ளியியல் தரவு தருமே சிறந்த தீர்வு
புள்ளியியல் தரவு தருமே சிறந்த தீர்வு
ADDED : ஜூன் 29, 2024 01:41 AM

கல்வி, மருத்துவம், பொருளாதாரம், விவசாயம், தொழில் என, தினசரி வாழ்வில் பிணைந்துள்ள அனைத்து துறைக்குமான திட்டமிடல், புள்ளி விபரங்களின் அடிப்படையில் தான் வகுக்கப்படுகிறது.
அரசின் திட்டமிடலுக்கு, புள்ளியியல் தரவுகள் தான் பேருதவி புரிகின்றன. ஆண்டுதோறும், ஜூன் 29ம் தேதி, 'தேசிய புள்ளியியல் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
இந்தாண்டு, 'முடிவெடுப்பதற்கு தரவுகளைப் பயன்படுத்துதல்' என்ற கருப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
புள்ளியியல் அறிவில் சிறந்த இந்தியர்கள்
இந்திய புள்ளியியல் நிறுவன கோவை பிரிவு முன்னாள் தலைவர் பேராசிரியர் ராஜகோபால் கூறியதாவது: புள்ளியியலின் தந்தை பேராசிரியர் பி.சி.மகாலனோபிஸ்; அவரது பிறந்த தினம் தான், தேசிய புள்ளியியல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் இல்லாத ஏழை மக்களின் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி ஐந்தாண்டு திட்டம் வர காரணமாக இருந்தவர் அவர் தான்.
புள்ளிவிபரம் சார்ந்த அறிவாற்றலில், இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர். அதன் விளைவாக, உலகின் எந்தவொரு நாட்டில் உள்ள பல்கலையிலும், புள்ளியியல் துறையில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் படித்த பேராசிரியர்கள் இருப்பர். நம் நாட்டின் புள்ளியியல் அறிவு, ஏற்றுமதியாகிறது என்றும் சொல்லலாம்.
தற்போது, ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்கள், புள்ளியியல் தரவுகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகின்றன; அத்தகைய படிப்புகளை தேர்ந்தெடுக்க பலரும் விரும்புகின்றனர். இக்காலகட்டத்தில், நோய் பரவல், காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு செயல்கள், ஒரே மாதிரி இருப்பதில்லை; அவற்றை கணிப்பதும், எதிர்கொள்வதும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது; இதற்கு புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் தான் தீர்வு காண முடியும். இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவற்றில் நிலைத்தன்மை இல்லை. அதற்கான காரணம், தீர்வுகளை ஆராயவும் புள்ளி விபர தரவுகள் உதவும்.
- இன்று (ஜூன் 29) தேசிய புள்ளியியல் தினம்.