ADDED : ஜூன் 29, 2024 01:41 AM
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் ஜூன் கடைசி வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுதும் இருந்து, மொத்தம், 44 அணிகள் பதிவு செய்துள்ள நிலையில், இன்று துவங்கி ஜூலை, 1ம் தேதி வரை அவிநாசி, திருமுருகன்பூண்டி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளது.