/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில ஸ்கேட்டிங் போட்டி கே.எம்.சி., மாணவர் அபாரம் மாநில ஸ்கேட்டிங் போட்டி கே.எம்.சி., மாணவர் அபாரம்
மாநில ஸ்கேட்டிங் போட்டி கே.எம்.சி., மாணவர் அபாரம்
மாநில ஸ்கேட்டிங் போட்டி கே.எம்.சி., மாணவர் அபாரம்
மாநில ஸ்கேட்டிங் போட்டி கே.எம்.சி., மாணவர் அபாரம்
ADDED : ஜூன் 04, 2024 12:43 AM

திருப்பூர்;மாநில அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி அசத்தியுள்ளது.
தமிழக அளவிலான பத்தாவது ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நீலகிரி மாவட்டம், குன்னுாரில் சமீபத்தில் நடந்தது. அதில், பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளி யு.கே.ஜி., மாணவர் அகத்தியன், போட்டியில் பங்கேற்று, இரண்டு பதக்கங்களையும், அதிக வெற்றி புள்ளிகள் பெற்று பரிசு கோப்பையை வென்றார்.
இப்போட்டியில் வென்ற மாணவனையும், பயிற்சி அளித்த ஜோதிபாசு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி தலைவர் சண்முகம், பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி தலைமை செயலர்சுவஸ்திகா மற்றும் பள்ளி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.